News September 10, 2025
தென்காசியில் நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி

தென்காசி மாவட்டத்தில் முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என இப்பள்ளி தோ்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் பெற்றுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி ஆகியோர் கலந்துகொண்டனா்.
Similar News
News April 7, 2026
தென்காசி: பைக் மோதிய விபத்தில் முதியவர் பலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், காமராஜ் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த மர வேலை செய்து வந்த சோமசுந்தரம் (70) , கீழப்பாவூர் தமிழ்நாடு கிராம வங்கி அருகே சைக்கிளில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 19 வயது கல்லூரி மாணவர் ராம்குமார் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 7, 2026
ஆலங்குளம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News April 6, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் மருத்துவம் இலவசம்

தென்காசி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற <


