News October 9, 2025
தென்காசியில் நாளை புகையிலை ஒழிப்பு பேரணி

தென்காசி நகராட்சிக்குட்பட்ட ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து அக்டோபர் 10 நாளை காலை 10 மணி அளவில் பொது சுகாதார துறையின் மூலம் தேசிய புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
Similar News
News October 10, 2025
தென்காசி: குறைகளை தெரிவிக்கும் நாள் வந்துவிட்டது!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (11:10.2025) அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க வருவாய் மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். இதில் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். SHARE!
News October 10, 2025
தென்காசியில் லஞ்சம் பெற்ற விஏஓ – கைது!

தூத்துக்குடி மாவட்டம், சண்முகவேலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கூட்டுப் பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற வி.ஏ.ஓ. ராஜ்குமார், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 10, 2025
தென்காசி மக்களே கவனமா இருங்க!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இரண்டு நாட்களில் தெருநாய் கடியால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முன்தினம் 27 பேரைக் கடித்ததைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் 21 பேரை வெவ்வேறு நாய்கள் கடித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனிடையே, நகராட்சி ஊழியர்கள் மொத்தம் 40 நாய்களைப் பிடித்து வெறிநாய் தடுப்பூசி செலுத்தினர்.