News August 26, 2025

தென்காசியில் தொடர் 6 நாட்களுக்கு ரயில்கள் ரத்து

image

தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆக. 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

தென்காசி: ரேஷன் கடை குறித்த புகாரா?

image

தென்காசி: மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04633-212114 எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

தென்காசி: பிரபல கோயில்களின் வழிபாட்டு நேரம்

image

▶️சித்திரசபை – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.
▶️மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை – காலை 5 – 10 மணி, மாலை 5 – 8 மணி வரை.
▶️திருமலை கோவில் – காலை 6 – 1 மணி, மாலை 5 – 8:30 மணி வரை.
▶️திருக்குற்றாலநாதர் கோவில் – காலை 6 – 12 மணி, மாலை 4:30 – 8:00 மணி வரை.
▶️காசி விஸ்வநாதர் கோயில் – காலை: 6 – 11 மணி , மாலை 4 – 8 மணி வரை.

*ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

தென்காசியில் நீர்நிலைகள் கணக்கெடுக்கும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைகள் கணக்கெடுப் புணி நடைபெற்று வருகிறது. 2வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணியானது கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், நகர்புறங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!