News January 8, 2025
தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10ம் தேதி அலுவலக வளாகத்தில் நடக்கிறது. முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம்.
Similar News
News January 26, 2026
தென்காசியில் இன்று ட்ரோன் பறக்க தடை

குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் போலீசார் அளித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் தென்காசி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் பகுதியை போலீசார் தங்கள் பாதுகாப்பில் எடுத்துள்ளனர். இந்த மைதானத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. மாவட்ட முழுவதில் உள்ள வழிபாட்டுதலங்கள், பஸ் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிக்கின்றனர்.
News January 26, 2026
செங்கோட்டை – தாம்பரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் எண் 06138 இன்று இயக்கப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு நாளை 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரம் செல்லும்.
News January 26, 2026
தென்காசி மக்களே இன்று இங்க போக மறக்காதீங்க!

1. தென்காசி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!


