News May 31, 2024
தென்காசியில் டெய்லரிடம் ஆன்லைனில் ரூ 5000 மோசடி

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குறி வைத்து செல்போனை தொடர்பு கொண்டு கியூ ஆர் கோடு அனுப்புகிறோம். அதில் ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பணம் வரும் என கூறி மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில் மேலகரம் பகுதியைச் சேர்ந்த டெய்லர் செல்வம் என்பவரது எண்ணுக்கும் நேற்று அழைப்பு வந்து 5 ஆயிரத்து இழந்துள்ளார். இது குறித்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தென்காசி ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

தென்காசி மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News September 10, 2025
தென்காசியில் நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி

தென்காசி மாவட்டத்தில் முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என இப்பள்ளி தோ்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் விருது மற்றும் சான்றிதழை வழங்கினாா். செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஜவஹா்லால் பெற்றுக் கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி ஆகியோர் கலந்துகொண்டனா்.
News September 10, 2025
தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

தென்காசி மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க உள்ள நிலையம் நேற்று மாலை சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 7 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் ராமநதி அணைப்பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 10 மில்லி மீட்டர், சங்கரன்கோவில் 8.50 மில்லி மீட்டர் மழை பெய்தது. கருப்பா நிதி அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் செங்கோட்டையில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.