News December 18, 2025
தென்காசியில் டிச.26 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12. 2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News December 19, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் விவசாய அடையாள எண் கண்டிப்பாக தேவை. மேலும், 22வது பிரதம மந்திரி கெளரவ தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டுத்தொகை பெறுவதற்கும் விவசாய அடையாள எண் தேவை.இதற்கு விண்ணப்பிக்க விவசாயிகள், வட்டார வேளாண்மை/தோட்டக்கலை அலுவலகங்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களோடு சென்று டிச.28க்குள் விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News December 19, 2025
தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் கண்டறிந்தால் சிறை

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் வேலை அளிப்பவர்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.