News December 18, 2025
தென்காசியில் டிச.26 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12. 2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News December 19, 2025
தென்காசி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
தென்காசி: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட திரிகூடபுரத்தில், ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் இருந்து வேறொரு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு பிரிவினர் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரிகூடபுரம் பகுதியில் அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
News December 19, 2025
தென்காசி: இலவச கார் ஓட்டுனர் பயிற்சி – APPLY!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஊரக வேலைவாய்ப்பு மையத்தின் கீழ் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. எனவே கிராமப்புறத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் அலுவலகத்தை அணுகவும்.


