News July 5, 2025
தென்காசியில் ஜூலை.7ல் சோலார் பேனல் சிறப்பு முகாம்

சோலார் பேனல்கள் நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, விண்ணப்பிக்கும் முறை,வங்கி கடன் உதவி, அரசின் மானியங்கள், சோலார் பேனல் மின் உற்பத்தியால் கிடைக்கும் பயன்கள் பற்றிய விரிவான தகவல்கள், தமிழக அரசால் அங்கீகாரம் பெற்ற சோலார் பேனல் நிறுவும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மின்வாரிய அலுவலர்கள் வழிகாட்டுதலில் ஜூலை 07 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறப்பு முகாம் தென்காசியில் நடக்கிறது
Similar News
News July 5, 2025
தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உதவும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 5, 2025
புளியங்குடி மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே 42 வயது விவசாயி, தனது 17 வயது மகளை கர்ப்பமாக்கி உள்ளார். மகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படவே, மருத்துவ பரிசோதனையில் 7 மாத கர்ப்பம் தெரியவந்தது. தாய் வெளியே சென்றபோது, மது போதையில் தந்தை தவறாக நடந்ததாக மகள் தெரிவித்தார். இதையடுத்து, தாய் அளித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News July 5, 2025
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஆண் சிகிச்சை உதவியாளர் மற்றும் பெண் சிகிச்சை உதவியாளர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment/-66 என்ற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.