News March 22, 2024
தென்காசியில் ஜான் பாண்டியன் போட்டி

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டதையொட்டி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.அதே போல் தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அரசு மருத்துவர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 8, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.7) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அட்டவணை வெளியீடு

தென்காசி வழியாக திருநெல்வேலி – சிவமோகா டவுண் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஞாயிறுதோறும் நெல்லையில் இருந்தும், திங்கள்தோறும் சிவமோகாவில் இருந்தும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரயில், பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, சேலம், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

இன்று (செப்டம்பர் 7) காலை 7 மணி நிலவரப்படி கடனா அணை நீர் இருப்பு 57 அடியாக உள்ளது. அணைக்கு 52 கான அடி நீர் வருகிறது. 85 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 62 அடி, கருப்பாநதி அணை நீர் இருப்பு 54 அடி, குண்டாறு அணை நீர் இருப்பு 36.10 அடி, நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 21 அடி, அடவி நைனார் அணை நீர் இருப்பு 127 அடியாக உள்ளது.