News April 25, 2024

தென்காசியில் கலெக்டர் தகவல்

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  கோடை காலத்தை அடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல், சளி இருமல், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை , மஞ்சள் காமாலை, மனிதர்கள் பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள் போன்ற தகவல்களை கீழ்காணும் https://ihip.mohfw.gov.in/cbs/-1 என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம் என்றார்.

Similar News

News April 3, 2026

தென்காசி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 3, 2026

ஆலங்குளம் வேட்பாளரிடம் இவ்வளவு கிலோ தங்கமா?

image

ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு செய்துள்ள ஹரி நாடார் தன்னிடம் ரூ.17 கோடி மதிப்பிலான 11.650 கிலோ தங்க நகைகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி மனு தாக்கல் செய்துள்ளார்‌. அதில் ரூ.1.18 கோடி மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும், 24 கிரிமினல் வழக்குகள் உள்ளன என தகவல் தெரிவித்தார்.

News April 3, 2026

செங்கோட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக சிவசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் துண்டானது. இதனால் 3 சக்கர நாற்காலியில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி செங்கோட்டை GH-க்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!