News April 4, 2025
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று (ஏப்ரல்4) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.(ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 10, 2025
புவிசார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை

தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலுமிச்சைச்சந்தை புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன்சிட்டி என்று பெயருண்டு. தற்போது புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார்குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி. *ஷேர்
News April 10, 2025
தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.
News April 10, 2025
தென்காசி நகரப் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

தென்காசி தாலுகாவில் வரும் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் 17ஆம் தேதி காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடக்கிறது கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 16ஆம் தேதி தாலுகாவில் நடக்கும் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் மாலை 6:00 மணி முதல் நகர, கிராம பகுதிகளில் கலெக்டர்ஆய்வு மேற்கொண்டு இரவு தங்குகிறார்.