News August 14, 2024
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 4, 2025
தோரணமலை முருகன் கோவிலில் நவ.5 ல் கிரிவலம்

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இம்மாத பௌர்ணமி யொட்டி நவம்பர் 5 காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடைபெறும் .இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து வருகிறார்.
News November 4, 2025
தென்காசி: சிறப்பு திருத்த உதவி மையம்

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம் 2025 தொடர்பாக தென்காசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்படி உதவி மையத்தின் 04633-222212 & 6381443953 ஆகிய தொலைபேசி எண்களில் தீவிர திருத்தம் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பாக 1950 என்ற கட்டணமில்லா வாக்காளர் உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
News November 4, 2025
தென்காசி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

தென்காசி மக்களே உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…


