News May 25, 2024
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசியில் இடி மின்னலுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News September 9, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது. *ஷேர்
News September 9, 2025
குற்றாலநாதர் கோவிலுக்குள் வர அனுமதி இல்லை

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட மெயின் அருவி கரை பகுதியில் பிரசித்தி பெற்ற
திரு குற்றாலநாதர் திருக்கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈரத்துணி, கைலி, நைட்டி, அரைக்கால் டவுசர் அணிந்து வர அனுமதி இல்லை மது அருந்திவிட்டு உள்ளே வரக்கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
வாசுதேவநல்லூர்: ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் அப்பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புளியங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.