News March 18, 2024
தென்காசியில் எடப்பாடி சூறாவளி சுற்றுப் பயணம்!

தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.27) தென்காசி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News September 3, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.2) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) மேளா சேர்க்கை முகாம் (செப்.08) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஒராண்டு தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுநர் பயிற்சி மேளா முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்.
News September 2, 2025
நெல்லை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவுரை

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்தில் பூச்சிகொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருட்கள் பயிர்களின் இலைகள் மற்றும் காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வேண்டுகோள்.