News September 5, 2025
தென்காசியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தென்காசி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News September 5, 2025
BREAKING: தென்காசி கோவில் தலைமை அர்ச்சகர் பணிநீக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் கோவிலில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி விளக்குகள், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News September 5, 2025
தென்காசி: இனி அலைச்சல் இல்லை.. எல்லாம் ONLINE தான்!

தென்காசி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேற்று மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது