News September 24, 2025
தென்காசியில் இறைச்சி விற்பனைக்கு தடை

தென்காசி நகராட்சி பகுதிகளில் வருகிற அக்.2, காந்தி ஜெயந்தியையொட்டி இறைச்சி விற்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணையின் படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறைச்சி கடை திறந்து வைக்க கூடாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 24, 2025
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் தடை!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்திற்குள் அரசாணை எண் 84 (G.O.MS) No.84, Environment and Forest (Ec2) Department : 25.06.2018 – ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் (பிளாஸ்டிக் சீட்டுகள், பிளோட்டுகள், டீகப்புகள், டம்ளர்கள், ஸட்ரா. கேரிபேக்ஸ்) போன்றவை கோயில் வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
தென்காசி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

தென்காசி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 24, 2025
தென்காசியில் கஞ்சா செடி வளர்த்த நபர்

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேதம் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் என்பவரது மகன் திருமலை குமார் ஆட்டோ ஓட்டுனர். இவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்காசி போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்த பொழுது அவரது வீட்டில் 10 கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.