News December 27, 2025

தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.

Similar News

News January 30, 2026

தென்காசி: அதிமுக வேட்பாளர்கள் இவர்களா?

image

தென்காசி, கடையநல்லுார், சங்கரன் கோவில், ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட முடிவு செய்ததாகவும் வாசுதேவநல்லுார் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு வழங்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாகவும் தகவல். அதன்படி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி MLA, EX.அமைச்சர் ராஜலட்சுமி, ராஜேந்திரன் or பிரபாகரனை வேட்பாளராக அறிவிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 30, 2026

தென்காசி: வனவிலங்கு வேட்டை; இருவர் கைது!

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன இந்த நிலை வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல்கள் அவ்வப்போது வனப்பகுதியில் சென்று வேட்டையாடி வருகின்றன. அவர்களை வனத்துறையினர் கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று புளியரை பகுதியில் வேட்டையில் ஈடுப்பட்ட 2 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

News January 30, 2026

தென்காசி: கத்திரிக்கோலால் குத்தி கொண்டு தற்கொலை

image

வாசுதேவநல்லூர், சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்த முனீஸ்வரன் (39) தனியார் ஆலையில் தையல் தொழிலாளியாக பணியாற்றினார். இவருக்கு மனநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. முன்பு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தவர் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், (ஜன.31) மனைவி வெளியூர் சென்றபோது, வீட்டில் இருந்த முனீஸ்வரன் கத்தரிக்கோலால் உடலில் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். வாசுதேவநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!