News December 29, 2025

தென்காசியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம், கலிங்கப்பட்டி, மேலநீலிதநல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், ஆவுடையார்புரம், இளையரசனேந்தல், நக்கலமுத்தன்பட்டி, கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கு இன்று (டிச. 29) மின்தடை.

Similar News

News December 30, 2025

BREAKING: வாசுதேவநல்லூர் MLA-வுக்கு 2 ஆண்டு சிறை

image

நிதி நிறுவனம் ஒன்றில் 2016ல் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் வாசுதேவநல்லூர் மதிமுக MLA சதன் திருமலைகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் MLA-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.

News December 30, 2025

நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை வெளியீடு – கலெக்டர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (30.12.2025) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் (District Lead Bank) சார்பில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் முகாமில் நபார்டு (NABARD) வங்கியின் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார்.

News December 30, 2025

தென்காசி மக்களே… நாளையே கடைசி…!

image

தென்காசி மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே, நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை இங்கே <>கிளிக் செய்து <<>>சரிபார்த்து கொள்ளலாம்.

error: Content is protected !!