News December 7, 2025
தென்காசியில் அப்ரண்டீஸ் மேளா.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தின் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுனர் அப்ரண்டீஸ் மேளா, தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் சேர்க்கை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
செங்கோட்டை – நெல்லை ரயில் தற்காலிக ரத்து

இன்று மார்ச் 4 ம் தேதி மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில், சேரன்மகாதேவியில் நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
News March 4, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டம் (தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம் கொடுக்கபட்டுள்ளது.
News March 3, 2026
தென்காசி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தென்காசி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


