News November 11, 2025
தென்காசி:மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன்(20). கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து கேள்விப்பட சாம்பவர்வடகரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு – தென்காசியில் வாகன தணிக்கை

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் உள்கோட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவீர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
News November 11, 2025
தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேணுமா – APPLY NOW!

தென்காசி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் நிரப்பல் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News November 11, 2025
சங்கரன்கோவில் வழி சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

தென்னக ரயில்வேயின் நான்டேட் – கொல்லம் – நான்டேட் சிறப்பு ரயில் வண்டி எண் 07111/07112 – 20.11.25 – 15.01.26 வரை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 – 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லும் ஜங்ஷன் இருந்து புறப்படும். வழி: மராட்டிய மாநிலம் நான்டேட், கச்சிகுடா, வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் வரை செல்லும்.


