News March 20, 2024
தென்காசி:திமுக மகளிரணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்

தென்காசியில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணியினர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Similar News
News April 3, 2025
அவசர உதவி வாட்ஸ் அப் எண் அறிவிப்பு – கலெக்டர் தகவல்

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க 7790 019008 என்ற செல்போன் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் நம்பரை 24 மணி நேரமும் வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி வாயிலாக கோரிக்கை மூலம் தகவல் அனுப்பி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா 19 வருடம் கழித்து வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கோவிலில் பணிகள் முடியாமல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமென மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News April 3, 2025
தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.