News October 23, 2025
தென்காசிக்கு முதல்வர் வருகை

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகிற 29ம் தேதி தென்காசி மாவட்டம் வருகிறார். அவருக்கு ஆலங்குளத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஆலங்குளத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்.பி.அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ஆவுடையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News October 23, 2025
தென்காசி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை., இன்றே கடைசி

தென்காசி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <
News October 23, 2025
தென்காசி: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை

தென்காசி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <
News October 23, 2025
தென்காசி: பெண் தற்கொலை – மூன்று பேர் கைது

மருதம்புத்தூரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சமூக வளைதளம் மூலம் அப்பெண்ணுடன் பழகிய சிலர் அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டதாக அவமானமடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக குறும்பலாப்பேரி கண்ணன், மருதம்புத்தூர் முத்துராஜா, முருகேசன் ஆகியோரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.