News January 2, 2026

தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

image

அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.02) தூய்மை பணியாளர்கள் 47-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 பெண் தூய்மை பணியாளர்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News January 5, 2026

சென்னை அருகே கோர விபத்து; 2 பேர் உடல் நசுங்கி பலி

image

திலீப், ஸ்டான்லி மற்றும் நீர்ஜ் ஆகியோர் நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தமாக மினி டெம்போவில் வந்து கொண்டிருந்தனர்.சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மாம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த டாரஸ் லாரியின் பின்பகுதியில் டெம்போ பயங்கரமாக மோதியது. இதில் திலீப், ஸ்டா–லின் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News January 4, 2026

சென்னையில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News January 4, 2026

சென்னை: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு- APPLY

image

சென்னை மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து, பதிவுசெயுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!