News December 15, 2025
தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.15) தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் தங்களின் பணிநிலை, சம்பளம், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 19, 2025
திருவள்ளூர் வாக்காளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் (டிச.20) மற்றும் (டிச.21) ஆகிய தினங்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் உதவி மையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து உதவி மையங்களில் வழங்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 19, 2025
பூந்தமல்லி பணிமனையில் 125 மின்சார பஸ்கள் இயக்கம்

திருவள்ளூர்: பூந்தமல்லி பணிமனையில் ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பஸ்கள் இன்று (டிச.19) முதல் இயக்கப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
News December 19, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில்
இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


