News March 24, 2025
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) சார்பில் தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று (24.03.2025) வழங்கினார்.
Similar News
News September 24, 2025
நாகையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மின்வாரிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, திட்டத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பளம், நிரந்தர பணி உறுதி, ஓய்வூதிய திட்டம், பணிநேர சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
News September 24, 2025
நாகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 21 மற்றும் 22 ஆகிய வார்டு பகுதிகளுக்கான முகாம் நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு தேவர் சமுதாய கூடத்தில் நாளை 25ஆம் தேதி காலை நடைபெறுகிறது என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News September 24, 2025
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை கோட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை செப்.25ம் தேதி நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்,