News October 30, 2025
தூத்துக்குடி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தூத்துக்குடி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News October 30, 2025
தூத்துக்குடி: உங்க பெயரை மாற்றனுமா? சூப்பர் வாய்ப்பு

தூத்துக்குடி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News October 30, 2025
50,000 பேருக்கு வேலை -மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்ததாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலை மூலம் சுமார் 50,000 பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார்.
News October 30, 2025
தூத்துக்குடியில் லாரி மோதி டிரைவர் உடல் நசுங்கி பலி

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்ச்செல்வன். இவரது லாரி துறைமுக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது. தமிழ்ச்செல்வன் லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது துறைமுகத்தில் இருந்து வேகமாக வந்த லாரி இவரது லாரியில் மோதியதில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தெர்மல் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


