News February 28, 2025
தூத்துக்குடி TO தமிழ்சினிமா; மகா நடிகனை பற்றி தெரிச்சிக்கோங்க

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி-க்கு நம்ம தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தான் சொந்த ஊர். அங்குள்ள ஜி.வி.என் கல்லூரியில் தான் பயின்றுள்ளார். நாடக கலைஞராக அறியப்பட்டவர், 1983-ல் கே.பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி 800 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கோவில்பட்டியில் பிறந்து கோலிவுட்டில் கலக்கும் நம்ம சார்லி நமக்கு பெருமைதானே மக்களே! SHARE IT
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சிறுவர்களுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோ ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மீறினால் அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.