News November 22, 2025
தூத்துக்குடி: SIR நிரப்பினால் தான் ஓட்டு! கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR படிவத்தை நிரப்புவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே, வாக்காளர் பெருமக்கள் இதனைத் தவறாமல் பயன்படுத்தவும், மேலும், படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர்களின் பெயர் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி: இளைஞர்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் இத்தகைய பயிற்சிகள் பெற்று பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
மணியாச்சி ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் இருந்து கடம்பூர் செல்லும் ரயில் பாதையில் நேற்று இரவு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் அடிபட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
தூத்துக்குடி: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <


