News December 13, 2025

தூத்துக்குடி: 2,835 கிலோ பீடி இலைகள் கடத்தல்!

image

தூத்துக்குடி கடலோர காவல் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் திடீர் சோதனையில் மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக 81 முட்டைகளில் 2,835 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 13, 2025

தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலைச்சல் இல்லாமல் விண்ணப்பிக்க வழி உள்ளது.
1.<>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) எல்லோரும் பயனடைய SHARE பண்ணுங்க

News December 13, 2025

தூத்துக்குடி: மாடியில் குதித்து பெண்ணிடம் செயின் பறிப்பு

image

தெற்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மனைவி பூமாடத்தி (30). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளியே வருகையில், அவர்கள் வீட்டு மாடியில் இருந்த திருடன், அங்கிருந்து குதித்து பூமாடத்தி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுண் செயினை பறித்து சென்றான். இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 13, 2025

தூத்துக்குடியில் அனைத்து ரயில்களும் ரத்து

image

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில்வே ஸ்டேஷன் முதல் தூத்துக்குடி ரயில்வே நிலையம் வரை இரட்டை இரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் வரும் 15ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதனால், தூத்துக்குடி ரயில் நிலையம் வரும் அனைத்து ரயில்களும் வரும் டிச.21 முதல் டிச.23 வரை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!