News January 22, 2026

தூத்துக்குடி: 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

image

தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் பணியமர்த்தியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் 2023-ம் ஆண்டு அரசாணைப்படி இஎஸ்ஐ தவறாமல் பதிவு செய்ய 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்காதா உள்ளாட்சி அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டப்படி அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 28, 2026

கோவில்பட்டி: தாக்குதலில் ஈடுபட்ட மூவர் கைது

image

கோவில்பட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை காரில் சென்ற போது சுமை ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் குமார் என்பவரின் ஆட்டோ மீது மோதியது. இதில் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமாரின் நண்பர்கள் முத்துக்குமார், தினேஷ்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் மருத்துவர் உடன் வந்தவரை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News January 27, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 27, 2026

தூத்துக்குடி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

image

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க

error: Content is protected !!