News October 17, 2025
தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

சாத்தான்குளம், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி அன்னலட்சுமி (50). இவர் வீட்டில் நள்ளிரவில் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த ரூ.6,500ஐ திருடியுள்ளார். அதனை கண்ட அன்னலட்சுமி கூச்சலிட்டுள்ளார். உடனே, அந்த மர்மநபர், அன்னலட்சுமி கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளுடன் அடையாள அட்டை தொலைபேசி குறியீட்டுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
தூத்துக்குடியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.