News January 31, 2026
தூத்துக்குடி: வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை

கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோலப்பொடி வியாபாரி மாரீஸ்வரன் (43). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமியும் (75) நேற்று (ஜன.31) மாலை வழக்கம்போல ஒன்றாக மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராமசாமி அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கோவில்பட்டி போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு தனியார் வேலை இணையத்தில் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் Field Technician – Air Conditioner பிரிவில் 25 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 – ரூ.50,000 வரை ஊதியமாக வழங்கப்படும் நிலையில் 18-28 வயதிற்குட்பட்ட ஆண்கள் <
News February 2, 2026
தூத்துக்குடி: நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் ஜெனித். இவர் புதியம்புத்தூரில் இருந்து டூவிலரில் ஓட்டப்பிடாரத்துக்கு சென்றுள்ளார். அப்போது மேலமடம் அமெரிக்கன் மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே சாமிநத்தத்தை சோ்ந்த தனபால் ஓட்டிவந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜெனித் உயிரிழந்த நிலையில் தனபால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News February 1, 2026
தூத்துக்குடி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


