News November 28, 2024

தூத்துக்குடி விமான நிலையம் வாகன நுழைவுக் கட்டணம் ரத்து!

image

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடும் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது நியாயமற்றது என சமூக ஆர்வலர் சங்கர் என்பவர் விமான நிலைய அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது பயணிகளை இறக்கிவிட வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார். பார்க்கிங்கிற்கு கட்டணம் உண்டு.

Similar News

News December 9, 2025

கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

News December 8, 2025

கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

image

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!