News April 25, 2025
தூத்துக்குடி: விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி

புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தத்துரூப ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.
Similar News
News April 25, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் என 6 – 8 வயது வரை உள்ள குழந்தைகள், 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதுபோன்று, இல்லத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை *SHARE* பண்ணுங்க
News April 25, 2025
நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 18 பேர் படுகாயம்

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, இன்று தனது குடும்பத்தினருடன், வேனில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, மதுரை திரும்பி கொண்டு இருந்தார். மதுரை பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற வேன் திடீரென்று நிலைத்தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் 4 குழந்தைகள் 8 பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 25, 2025
தூத்துக்குடி: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை<