News August 8, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு….

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (ஆகஸ்ட்-9) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் சரிசெய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 31, 2025

தூத்துக்குடி போலீஸ் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பைக் ரேஸ், வீலிங், அதிவேக ஓட்டம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக 2500 போலீசார், சிசிடிவி, டிரோன் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News December 31, 2025

தூத்துக்குடி எஸ்.பி டிரான்ஸ்பர்.. புதிய எஸ்.பி நியமனம்!

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட்ஜானுக்கு ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிட மாற்றம் வந்தது. இந்நிலையில் தொடர் பண்டிகை காலங்கள் வந்ததால் அவர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இப்படியான சூழலில் அவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!