News September 27, 2025
தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News January 2, 2026
தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தூத்துக்குடி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 2, 2026
திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி வந்தது. திருச்செந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் G.H-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


