News March 1, 2026

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 1, 2026

தூத்துக்குடி: வீட்ல கரண்ட் இல்லையா.?

image

தூத்துக்குடி மக்களே, இந்த மழை நேரத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ்-க்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News March 1, 2026

தூத்துக்குடி எம்.பி ஈரான் போர் குறித்து பதிவு

image

ஈரான் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளால் மிகவும் வருத்தமடைகிறேன். போர் உறுதியற்ற தன்மையையும், மனித துன்பத்தையும் மட்டுமே தீவிரப்படுத்துகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 1, 2026

பனைத் தொழில் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நபார்டு சார்பில் பனைத் திருவிழா வரும் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள பனை தொழில் செய்பவர்கள் <>https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf5iFGcz2L2yijQpOxMkRgnyZtGwWi-Zt5-fWyUzKIbBOF9Aw/viewform <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!