News August 14, 2025
தூத்துக்குடி: ரூபாய் 1 லட்சம் வேணுமா..?

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழாவையொட்டி, ஆக 14 முதல் 21 வரை புகைப்படப் போட்டி நடைபெறும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார். மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை தலைப்புகளில் 5 சொந்தப் படங்களை, AI, கிராபிக்ஸ் இல்லாமல், 5 MB-க்குள் thoothukudi.nic.in தளத்தில் பதிவேற்றலாம். முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000, 10 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.5,000 வழங்கப்படும்.
Similar News
News August 14, 2025
தூத்துக்குடி: மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் (MLHP) தொகுப்பூதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத ஊதியம் ரூ.18,000. விண்ணப்பங்களை <
News August 14, 2025
தூத்துக்குடி: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை 0461-2325606 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News August 14, 2025
தூத்துக்குடியில் புகைப்படப் போட்டி அறிவிப்பு

தூத்துக்குடி 6வது புத்தகத் திருவிழா ஆக.22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புகைப்படப் போட்டி ஆக. 14 – 21 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை போன்ற தலைப்புகளில் அதிகபட்சம் 5 சொந்தப் படங்களை, AI/கிராபிக்ஸ் இல்லாமல், 5 MBக்கு குறைவாக, thoothukudi.nic.in மூலம் பதிவேற்றலாம்.