News December 31, 2025
தூத்துக்குடி: ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் இன்று காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் – ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி வந்தது. திருச்செந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் G.H-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News January 2, 2026
தூத்துக்குடி: 12th தகுதி.. ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <
News January 2, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை

விளாத்திகுளத்தில் க.சென்றாயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்பனசாமி (37) சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அங்கு, 15 வயது சிறுமிக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அப்பனசாமியை (37) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


