News December 23, 2025
தூத்துக்குடி: ரயில் மோதி பரிதாப பலி!

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் (47). இவர் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக நெல்லை வந்தார். குலவணிகர்புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News December 27, 2025
தூத்துக்குடி: சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயல்பட்டினம் –திருச்செந்தூர் சாலை மற்றும் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த சோதனையில் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்கி, மீண்டும் நடந்தால் வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர்.
News December 27, 2025
வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த மாதவன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.