News December 30, 2025
தூத்துக்குடி: மூச்சுத் திணறலால் 2 பெண்கள் பலி

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வ சுந்தரி (65) நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதேபோல, பூபால்ராயபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (48) மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இறந்துள்ளார். இதுபற்றி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.
News January 1, 2026
தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 1, 2026
தூத்துக்குடியில் நூதன மோசடி! கம்மி விலையில் பொருட்கள்?

தூத்துக்குடியில் சவுண்ட் சா்வீஸ் தொழில் செய்துவரும் நபருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபா்தன்னிடம் குறைந்த விலையில் மின்னணு பொருள்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளாா். இதனால், அவா் கேட்ட ரூ.1.42 லட்சம் பணத்தை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். ஆனால் பொருட்கள் வந்து சேரவில்லை. இந்த மோசடி புகாரை அடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமாரை (35) கைது செய்து சிறையில் அடைத்தனர்.


