News April 6, 2025

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுரை

image

இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. “ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுவீர், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வீர்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2025

சமையல் எண்ணெய் தூத்துக்குடி துறைமுகம் சாதனை

image

தூத்துக்குடி துறைமுகம் 2024 – 25 நிதியாண்டில் 4,70,352 டன் சமையல் எண்ணெய் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2023 இதே வேளையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 581 டன்கள் மட்டுமே கையாண்டு இருந்தது. சமையல் எண்ணெய் கையாள்வதில் துறைமுகம் 14.28% வளர்ச்சி அடைந்துள்ளதாக துறைமுக செய்தி குறிப்பு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் நாளை(ஏப்.10) மகாவீரர் ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டும் மூட ஆணையிடப்படுகிறது. கடை பணியாளர்கள் அனைவரும் மதுபான கடை மற்றும் மதுகூடம் மூடியிருப்பதை உறுதி செய்து கடையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 9, 2025

தூத்துக்குடியில் வரையறுக்கப்பட்ட விடுப்பு – ஆட்சியர்

image

தூத்துக்குடி சாஸ்தா கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் அன்று மக்கள் குலதெய்வ வழிபாடு நடத்துவது வழக்கம். இந்தாண்டு ஏப்.11 அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று அரசு அலுவலர்கள் விடுமுறை கோரும்பட்சத்தில் எவ்வித மறுப்பும் இன்றி அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். மேலும் அன்று தேர்வு இல்லாதா மாணவர்கள், ஆசிரியர்கள் விடுப்பு கேட்டால் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!