News April 15, 2025
தூத்துக்குடி மாவட்டம் உருவானது பற்றி தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி உருவாக்கப்பட்டது. சிதம்பரனார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக கஸ்தூரி தங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.
Similar News
News April 16, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
News April 15, 2025
17-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News April 15, 2025
தூத்துக்குடியில் ஏப்.17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.04.25 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் இளம் பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.