News September 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்கும் வகையில் சுமூக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி வசந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<
News September 11, 2025
தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா??

தூத்துக்குடி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.