News April 18, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டுகள்

சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.
Similar News
News November 1, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளதாவது, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உளுந்து, பாசி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 31, 2025
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு போட்டிகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் புதூர் காவல் நிலையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் புதூரில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கட்டுரை போட்டி, மினிமரத்தான் உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி காவல்துறையினர் பாராட்டினர்.
News October 31, 2025
தூத்துக்குடி: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0461-2334526 / 0461-2334282 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.


