News January 26, 2026
தூத்துக்குடி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜனவரி 31.ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை மூன்று மணிக்கு வரை திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News February 4, 2026
தூத்துக்குடி: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் (19) தனது நண்பருடன் பைக்கில் நேற்று (பிப்.3) புதுக்கோட்டை சென்றுள்ளார். அப்போது மங்களகிரி விலக்கு அருகே தனியார் பள்ளி பேருந்தில் உரசியதில் நிலை தடுமாறி நடந்து சென்ற காட்வின் என்பவர் மீது பைக் மோதியது. இதில் தாடிக்காரன் படுகாயமடைந்து உயிரிழந்தார். காட்வின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை போலீசார் விசாரணை.
News February 4, 2026
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் நெல்லை பேட்டையை சேர்ந்த கூடலிங்கம் (27), சுத்தமல்லியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை செய்ததன் பெயரில் கலெக்டர் இளம்பகவத் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
News February 3, 2026
தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக குற்ற அவனை காப்பக டி.எஸ்.பி ராமச்சந்திரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.


