News November 28, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ. 28) மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி: மகனுக்கு கத்திக்குத்து.. தந்தை கைது

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி பரமேஸ்வரி குடும்ப தகராறில் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வருகிறார். இசக்கி பாண்டி நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறு ஈடுபட்டு, மனைவியை கத்தியால் குத்த பயந்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அவரது மகன் சந்தோஷ் என்ற சிறுவன் காயமடைந்தான். இது சம்பந்தமாக, முத்தையாபுரம் போலீசார் இசக்கி பாண்டியை கைது செய்தனர்.
News November 28, 2025
தூத்துக்குடி: மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தூத்துக்குடி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 28, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)


