News March 1, 2025
தூத்துக்குடி மக்ரூன் பற்றிய சுவாரஸ்ய தகவல்

தமிழ்நாட்டில் முதன்முதலாக தூத்துக்குடியில் தான் மக்ரூன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை 100 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியவர் சின்ன நட்டாத்தியை சேர்ந்த அருணாசலம் பிள்ளை. இவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது போர்த்துகீசியரிடம் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மக்ரூன் என்பது போர்த்துகீசிய சொல், தூத்துக்குடியில் அறிமுகமானதால் தூத்துக்குடி மக்ரூன் என அழைக்கப்படுகிறது.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News March 3, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2025
இன்று முதல் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்/அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது; இன்று கயத்தாரில், நாளை கடம்பூரில், 4 ம் தேதி தூத்துக்குடி, 5ம் தேதி கழுகுமலையில், 6ம் தேதி விளாத்திகுளம் கிழக்கில் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.
News March 2, 2025
தூத்துக்குடியில் ‘8’ என சொல்லாத ஊர் இருந்தது! தெரியுமா?

சுதந்திரத்திற்கு முன்பு திருநெல்வேலி சீமையில் மிகப்பெரியபாளையம் எட்டையாபுரம் ஆகும். இதனை ஆண்ட மன்னர்கள் எட்டப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். அப்போது, மக்கள் அரசு களஞ்சியத்தில் நெல்லை அளந்து கொடுக்கும்போது லாபம் 1,2,3,4,5,6,7 என்று அளக்கும் அவர்கள் 8 க்கு பதில் ராஜா என்பார்களால். எட்டு என்றால் (எட்டப்பர்) ராஜாவை குறிக்கும் என்பதால் எட்டாம் நம்பரை அப்போது சொல்வதில்லையாம். *புது தகவல்னா ஷேர் பண்ணுங்க