News January 9, 2025
தூத்துக்குடி போலீஸ் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10.ம் தேதி பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலஅலங்காரதட்டில் உள்ள பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விதிக்கப்பட்ட விதிமுறைகள் வழிமுறைகளை பின்பற்றுமாறும் காலை 6 மணி முதல் 5 மணி வரை மட்டுமே நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
தூத்துக்குடி இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க…!

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேலை நாடுவோர் கலந்து கொண்டு பயன்பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர்…!
News February 12, 2026
தூத்துக்குடி: அமைச்சர் வழக்கு ஒத்திவைப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது வழக்கினை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News February 12, 2026
தூத்துக்குடி அரசு அலுவலரை கடித்த பாம்பு

தூத்துக்குடி, புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மாரியப்பன் இன்று பணியில் இருந்தபோது அருகில் ஜன்னல் ஓரத்தில் இருந்த பீரோவில் மேல் பகுதியில் இருந்த பாம்பு ஒன்று, மாரியப்பன் மேல் விழுந்தது மட்டுமின்றி அவரது வலது கையின் கட்ட விரலை கடித்துள்ளது. இதனால் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.


