News April 2, 2025
தூத்துக்குடி பொதுமக்களுக்கு எஸ்பி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News April 3, 2025
தூத்துக்குடி குச்சி மிட்டாய் சுவைத்து இருக்கிறீர்களா?

தூத்துக்குடி என்றால் மக்ரூன் எவ்வளவு பெயர் பெற்றதோ அதைப்போல தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் நெய் குச்சி மிட்டாய் புகழ்பெற்றது. நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்டது. முந்திரிப் பருப்பு நெய் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த நெய் குச்சி மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நெய் குச்சி மிட்டாய் தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி வருகிறது.